முக்திநாத் பசுபதிநாத் நேபாள் மற்றும் திவ்ய தேசங்கள் சிறப்பு யாத்திரை
From
₹39900.00
Duration
15 days
Tour Type
மேலோட்டம்
முக்திநாத், பசுபதிநாத் (நேபாள) மற்றும் திவ்ய தேசங்கள் சிறப்பு யாத்திரை
சென்னை யாத்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் வழங்கும் இந்த சிறப்பு யாத்திரை, புனிதமான முக்திநாத் மற்றும் பசுபதிநாத் கோயில்கள் உள்ளிட்ட நேபாளத்தின் முக்கிய ஆன்மிக தலங்களின் தரிசனத்திற்கான ஒரு அழகிய வாய்ப்பை வழங்குகிறது. இதோடு, இந்த பயணம் தென் இந்திய திவ்ய தேசங்களை தரிசிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயண அம்சங்கள்:
- முக்திநாத் கோயில்: இந்த புனித தலம், சகல பாவங்களையும் நீக்கும் முக்தி நிலையை அடைய உதவும் திவ்ய தரிசனம்.
- பசுபதிநாதர் கோயில்: உலகப் புகழ்பெற்ற இந்த சிவாலயம் நேபாளத்தின் மரபு மற்றும் ஆன்மிக சக்தியைக் காட்டுகிறது.
- திவ்ய தேசங்கள்: ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல பிரசித்தமான திவ்ய தேசங்கள் தரிசனம்.
- காளிகாஷ்தி மற்றும் பிற முக்கிய கோயில்கள்: ஆன்மிக விளக்கங்களுடன் தரிசனம்.
3Ac ரயில் Ac பேருந்து சுத்தமான ரூம் வசதி தென்னிந்திய சைவ உணவு மினரல் வாட்டர் தமிழ் கைடு வசதி போட் மற்றும் உள்ளூர் சுற்றிப் பார்க்கும் வாகன வசதி ஆகியவை இக்கட்டணத்தில் அடங்கும்
பயண திட்டம்
எல்லாம் வல்ல காசி விஸ்வநாதர் திருவருள்
துணையுடன் முக்திநாத், பசுபதிநாத், காசி, அயோத்தி புனித யாத்திரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுதல்.
ரயில் பயணம் (ரயில் பயணத்தின் போது
உணவு அவரவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். காசியில் இறங்கியது முதல் அயோத்தியில் திரும்ப ரயில் புறப்படும் வரை தென்னிந்திய சைவ உணவு வழங்கப்படும் திரும்ப வரும்போது ரயில் பயணத்தில் சாப்பிடுவதற்கு இரண்டு நேரத்திற்கு பார்சல் செய்து தரப்படும். நிறுவனத்தின் சார்பில் தட்டு டம்ளர் தங்களுக்கு வழங்கப்படும்.
அதிகாலை ஆக்ரா சென்றடைதல், காலை
உணவுக்குப் பின்னர் சற்று ஓய்வெடுத்தல் விருப்பப்படுபவர்கள் ஆக்ராவில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் சென்று பார்த்து விட்டு வருதல் மதிய உணவுக்குப் பிறகு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நைமி சாரண்யம் என்கிற அழகிய நகரத்திற்கு புறப்படுதல் இரவு தங்குதல்.
காலை உணவுக்குப் பிறகு நைமி சாரண்யம்
நகரில் அமைந்துள்ள கோமதி நதிக்கரைக்கு சென்று புனித நீராடுதல், பின்னர் அருகே அமைந்துள்ள சக்கர தீர்த்தத்தில் புனித நீராடுதல் அருகே அமைந்துள்ள சக்தி பீடத்தை தரிசனம் செய்தல் மதிய உணவுக்குப் பிறகு ராமஜென்ம பூமி அமைந்துள்ள அயோத்தி நகருக்கு புறப்படுதல்அயோத்தி குழந்தை ராமர் தரிசனம் அயோத்தி நகரம் சுற்றிப் பார்த்தல் இரவு தங்குதல்.
அதிகாலை நான்கு மணி அளவில் காத்மாண்டு நேபால்
தலைநகர் நோக்கி புறப்படுதல் கொஞ்சம் நெடுந்தோறும் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் வழியில் குளிப்பதற்கு அவகாசம் இருக்காது எனவே விரும்புவர்கள் ரூமிலேயே குளித்துவிட்டு வரவேண்டும்.
காலை 8 மணி அளவில் நேபால் பார்டர் சென்று அங்கு செக்கிங் செய்து விட்டு பார்டருக்கு அந்தப் பக்கம் சென்று நமது பயணத்தை தொடர வேண்டும். புதிய ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் மிகவும் பழையதாக இருப்பதும் ஜெராக்ஸ் எடுத்து இருப்பதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நாம் வேறு நாட்டிற்கு செல்கிறோம் என்பதை உணர்ந்து அந்த நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நாம் பயணம் செய்ய வேண்டி இருக்கும் எனவே ஆதார் கார்டு புதியதாக பிரின்ட் எடுத்து அழகாக லேமினேஷன் செய்து கொண்டு வர வேண்டும்.
புதியதாக எடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 4 கொண்டு வர வேண்டும் பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தயார் செய்து வைக்க வேண்டும். நேபால் நாட்டில் நமது பணம் பெற்றுக் கொள்வார்கள் கூடுமானவரை 50 ரூபாய் 100 ரூபாய் நோட்டாக கொண்டு வர வேண்டும் 500 ரூபாய் நோட்டுக்கு அங்கே சில்லறை கொடுக்க மாட்டார்கள் எனவே தயவு செய்து 50 100 ரூபாய் கொண்டுவர வேண்டும். நேபால் எல்லையை கடக்கும் போது போலீஸ் மாமுல் ரூபாய் 200 மட்டும் கொடுக்க வேண்டி இருக்கும்.
பின்னர் நேபால் பார்டர் சோனாலி லிருந்து நேபாள் நாட்டின் அழகிய நகரமான போக்ரா நோக்கி நமது பயணம் தொடரும் சாலைகள் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும் நமது பேருந்து பொறுமையாகவும் நிதானமாகவும் தான் செல்லும் ஏனெனில் நாம் அதிகமாக மலைப்பகுதியில் பயணம் செய்ய வேண்டி இருக்கும் சுமார் இரவு 8 மணி அளவில் நாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தங்குமிடம் சென்று இரவு போக்ராவில் தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் சிறிய பேருந்து
மூலமாக 108 திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாதர் பெருமாளை தரிசனம் செய்ய புறப்படுதல் காலி கண்டகி நதிக்கரை ஓரமாக நாம் பயணம் செய்யும்பொழுது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். போகும் வழியில் கலேஸ்வர் சுயம்புவாக அமைந்துள்ள சிவபெருமானையும், மகாசக்தி அம்மனையும் தரிசனம் செய்தல். இரவு முக்திநாத் மலையடிவாரத்தில் தங்குதல் குளிர் சற்று அதிகமாக இருக்கும் எனவே சொட்டர் தலை குல்லா கை கிளவுஸ் காலில் அணிய சாக்ஸ் (3set) அவசியம் கொண்டு வர வேண்டும் ஜலதோஷத்திற்கு பயன்படுத்தக்கூடிய தேவையான மாத்திரைகள் தைலம் ஆகியவற்றை மறக்காமல் கொண்டு வர வேண்டும்.
முக்திநாத பெருமாளை தரிசனம் செய்வது நாம்
ஏழு பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாகவே அமைந்துள்ளது மிக சிறிய அளவிலான படிகளில் மெது மெதுவாக சென்று பெருமாள் திருக்கோயிலுக்கு முன்னதாக சென்றடைய வேண்டும் அங்கு இரண்டு குளங்கள் உள்ளது ஒன்று
பாபகுண்டம் என்றும் மற்றொன்று புண்ணிய குண்டம் என்றும் அழைக்கப்படுகிறது முதலில் பாப குண்டத்தில் இறங்கி நீராடி நமது பாவங்களை போக்கிக் கொள்ள வேண்டும் பின்னர் அருகில் அமைந்துள்ள புண்ணிய குண்டத்தில் நீராடி பின்னர் அருகில் அமைந்துள்ள 108 கோமுக தீர்த்தங்களில் நீராட வேண்டும் பின்னர் அழகே உருவாக அமைந்துள்ள முக்திநாத் பெருமாளை கண்ணாரக் கண்டு மனம் உருக பிரார்த்தனை செய்து வழிப்பட வேண்டும். பின்னர் அங்கிருந்து சிறிய பேருந்து மூலமாக போக்ரா திரும்புதல் இரவு தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் போக்ராவில் அமைந்துள்ள
பிந்துபாஷினி திருக்கோயில் மற்றும் குகைக்குள் சுயம்புவாக அமைந்துள்ள குப்தேஸ்வர் திருக்கோயில் சென்று தரிசனம் செய்து வருதல். மதிய உணவுக்கு பின்னர் போக்ராவின் அழகிய ஏரியின் நடுவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற டால் வராகி அம்மனை படகுமூலம் சென்று தரிசனம் செய்து வருதல் (படகு டிக்கெட் அவரவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும்) இரவு போக்ராவில் தங்குதல்.
உலகப் புகழ்பெற்ற நகரமான காத்மாண்டு
என்கிற சுற்றுலா நகரத்திற்கு நமது பேருந்து மூலமாக புறப்படுதல் போகும் வழியில் மலை மீது அமைந்துள்ள மணக் காமனா தேவி திருக்கோயிலுக்கு ரோப் கார் மூலமாக சென்று தரிசனம் செய்து வருதல் (ரோப் கார் டிக்கெட் அவரவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும்) இரவு காத்மாண்டில் தங்குதல்.
அதிகாலை மிகவும் பிரசித்தி பெற்ற பசுபதிநாத்
திருக்கோயில் சென்று மகாசக்தி வாய்ந்த சிவபெருமானை தரிசனம் செய்தல் பின்னர் 51 சக்தி பீடங்களில் ஒன்றான இருதய அம்மனை தரிசனம் செய்தல். மதிய உணவுக்குப் பிறகு சுயம்பு நாத் திருக்கோயில் ஜல நாராயணன் திருக்கோயில் மற்றும் தர்பார் ஸ்கொயர் உள்ளிட்ட சில இடங்களை பார்த்து ரசித்தல் இரவு தங்குதல் (உள்ளூர் சுற்றிப் பார்க்கக் கூடிய வேன் அல்லது ஆட்டோ செலவு அவரவர்களைச் சாரும்)
காலை உணவுக்குப் பின்னர் கோரக்பூர் நோக்கி புறப்படுதல் போகும் வழியில் புத்தர் பிறந்த புனித இடமான லும் பிணி சென்று தரித்து வருதல் இரவு சோனாலி பார்டரில் தங்குதல்.
காலை உணவுக்குப் பிறகு நேபால் பார்டரில் செக்கிங் முடித்துவிட்டு கோரக்பூர் சென்று அங்கு அமைந்துள்ள புகழ்பெற்ற கோரக்கநாதர் சிவபெருமானை தரிசனம்செய்தல் மதிய உணவுக்கு பின்னர் காசிமா நகர் நோக்கி புறப்படுதல் இரவு காசியில் தங்குதல்.
அதிகாலை புனிதம் நிறைந்த கங்கை நதியில் நீராடுதல் காலை உணவுக்குப் பிறகு படகு மூலமாக சென்று காசி விஸ்வநாதர்
காசி அன்னபூரணி காசி விசாலாட்சி திருக்கோயில்கள் தரிசனம் செய்தல் மதிய உணவுக்குப் பிறகு கடைவீதி சுற்றிப் பார்த்தல். இரவு 8 மணி அளவில் முகல் சராய் ரயில் நிலையம் சென்று ரயில் மூலம் சென்னை புறப்படுதல்.
ரயில் பயணம் ரயில் பயணத்தின் போது அவரவர் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பிற்பகல் நலமுடன் வந்தடைதல்.