நவ ஜோதிர் லிங்க தல யாத்திரை
From
₹37900.00
Duration
15 days
Tour Type
மேலோட்டம்
நவ ஜோதிர்லிங்க தல யாத்திரை
சென்னை யாத்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் – சிறப்பு யாத்திரை
இந்த ஆன்மிக யாத்திரை நவ ஜோதிர்லிங்க தலங்களை சுற்றி, பக்தர்களுக்கு சிவனின் அருள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பான அனுபவமாக அமையும். இந்த 9 புனித தலங்கள் இந்தியாவின் முக்கிய ஜோதிர்லிங்க தலங்களாகவும், சிவனின் பூரண உருவமாகவும் போற்றப்படுகின்றன.
பயணக் கட்டணத்தில் உள்ளவை:
3Ac ரயில் Ac பேருந்து சுத்தமான ரூம் வசதி தென்னிந்திய சைவ உணவு மினரல் வாட்டர் தமிழ் கைடு வசதி போட் மற்றும் உள்ளூர் சுற்றிப் பார்க்கும் வாகன வசதி ஆகியவை இக்கட்டணத்தில் அடங்கும்
- தனியார் டிராவல் பேருந்து மற்றும் ரயில் பயண வசதி.
- ஒவ்வொரு இடத்திலும் வசதியான தங்குமிடங்கள்.
- பயணத்தில் உள்துறை ஏற்பாடுகள்.
பயண திட்டம்
எல்லாம் வல்ல அண்ணாமலையார் திருவருள் துணையுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.00 மணி அளவில் ஹைதராபாத் நோக்கி புறப்படுதல்.
காலை ஹைதராபாத் ரயில் நிலையம். ரயில் நிலையத்தில் சற்று ஓய்வுக்கு பின்னர் ஸ்ரீசைலம் நோக்கி புறப்படுதல் போகும் வழியில் காலை உணவு வழங்கப்படும். மாலை ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் தரிசனம் செய்தல். இரவு ஸ்ரீசைலத்தில் தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் ஸ்ரீசைலத்தில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத்தை நோக்கி பயணத்தை துவங்குதல். வரும் வழியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ ராமானுஜர் திருவுருவ சிலை தரிசனம் செய்தல். அங்கு அமைந்துள்ள 108 திவ்யதேச பெருமாள் திருக்கோவிலை தரிசனம் செய்தல். இரவு ரயில் மூலம் பூனே புறப்படுதல்.
காலை பூனே ரயில் நிலையம் சென்றடைதல் காலை உணவுக்கு பின்னர் புனேவில் இருந்து புறப்பட்டு பீமா சங்கர் ஜோதிலிங்கம் தரிசனம் செய்தல்.
இரவு பீமா சங்கரில் தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் நாசிக் புறப்படுதல். நாசிக்கில் அமைந்துள்ள திரியம்பகேஸ்வர் ஜோதிலிங்கம் தரிசனம் செய்தல். இரவு சீரடியில் தங்குதல்.
அதிகாலை சீரடி சாய்பாபா தரிசனம் செய்தல். காலை உணவுக்கு பின்னர் கிருஷ்ணேஸ்வர் ஜோதிடலிங்கம் தரிசனம் செய்தல். போகும் வழியில் எல்லோரா குகை கோயில்களை சுற்றிப் பார்த்தல். இரவு பர்லியில் தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் பர்லி வைத்தியநாத் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்தல். தரிசனம் முடித்து அவுண்டா என்னும் நகரை சென்றடைதல். அவுண்டா நாகநாத் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்தல். இரவு மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் புறப்படுதல்.
காலை ஓம்காரேஸ்வர் சென்றடைதல். நர்மதா நதியில் புனித நீராடுதல். படகுமூலம் சென்று ஓம்காரேஸ்வர் ஜோதிர்லிங்கம் தாரிசனம் செய்தல்.மதிய உணவுக்குப் பின்னர் உஜ்ஜைனி சென்றடைதல். இரவு உஜ்ஜெயினியில் தங்குதல்.
அதிகாலை உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் தரிசனம் செய்தல். காலை உணவுக்குப் பின்னர் ஆட்டோ மூலம் கால பைரவர், மகாகாளி மற்றும் உஜ்ஜெயினியில் அமைந்துள்ள முக்கியமான வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை தரிசனம் செய்தல். இரவு ரயில் மூலமாக அகமதாபாத் புறப்படுதல்.
காலை அகமதாபாத் சென்றடைதல். காலை உணவுக்குப் பின்னர் சோம்நாத் புறப்படுதல். மாலை சோம்நாத் சென்றடைதல். சற்று ஓய்வுக்கு பின்னர் பன்னிரு ஜோதிர் லிங்கங்களில் முதல் ஜோதிர் லிங்கமான சோமநாதீஸ்வரர் தரிசனம் செய்தல். இரவு சோம்நாத்தில் தங்குதல்.
காலை உணவுக்கு பின்னர் சோம்நாத்தில் அமைந்துள்ள பழைய சோம்நாத் திருக்கோவில், கீதா பவன், ராமர் கோவில் உள்ளிட்ட இடங்களை தரிசனம் செய்தல்.
மதிய உணவிற்கு பின்னர் நிஷ்கலங் மகாதேவ் திருக்கோவிலை நோக்கி புறப்படுதல். இரவு பாவ் நகரில் தங்குதல்.
அதிகாலை கோலியாக் கடற்கரை சென்றடைதல் கடல் உள்வாங்கும் நேரத்திற்கு ஏற்ப நம் பயணத்தை திட்டமிட்டு கடலுக்கு நடுவே அமைந்துள்ள பஞ்சப் பாண்டவர்களால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கங்களை தரிசனம் செய்தல்.
மதிய உணவிற்கு பின்னர் அகமதாபாத் நோக்கி புறப்படுதல். இரவு அகமதாபாத்தில் தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் அகமதாபாத்தில் அமைந்துள்ள மார்க்கெட்டில் பர்ச்சேஸ் செய்தல். மதிய உணவுக்கு பின்னர் அகமதாபாத்தில் அமைந்துள்ள அக்ஷர்தாம் திருக்கோவில் மற்றும் காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமம் சுற்றிப் பார்த்தல். இரவு ரயில் மூலமாக சென்னை புறப்படுதல்.
ரயில் பயணம்.
அதிகாலை நலமுடன் சென்னை ரயில் நிலையம் வந்தடைதல்.