காசி யாத்திரை சிறப்பு பௌர்ணமி & கும்பமேளா சுற்றுலா திட்டம்

From

21900.00

Duration

12 days

Tour Type

மேலோட்டம்

ஓம் நமசிவாய
சென்னை யாத்ராஸ் டூர்ஸ் & டிராவல்ஸ் 2025 ஆண்டுக்கான தை அமாவாசை மற்றும் மகா கும்பமேளா சிறப்பு காசி யாத்திரை பற்றிய முழுமையான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த 12 நாள் யாத்திரையில் புனித காசி மற்றும் கயா உள்ளிட்ட மகா புண்ணிய ஸ்தலங்களின் தரிசனத்துடன், அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மற்றும் பல திவ்ய தேசங்களின் தரிசனம் அமைந்துள்ளது.

பயணத்தில் மதுரா, கோகுலம், ஆக்ரா தாஜ்மஹால், நைமிசாரண்யம், அயோத்தி, புத்தகயா, மற்றும் காசி விஸ்வநாதர், காசி அன்னபூரணி, கங்கா ஆரத்தி ஆகிய மெய்சிலிர்க்கும் இடங்களை பார்வையிடுவதற்கான அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

பயண கட்டணத்தில் 3rd AC ரயில் டிக்கெட், 2×2 புஷ்பேக் பேருந்து, சுத்தமான ரூம்கள், தென்னிந்திய சைவ உணவு, மினரல் வாட்டர், தமிழ் கைடு, மற்றும் உள்ளூர் சுற்றுலா வாகன வசதிகள் அடங்கும்.

பயண திட்டம்

எல்லாம் வல்ல அண்ணாமலையார் திருவருள் துணையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணி அளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் யாத்திரை புறப்படுதல் (இரவு ஏழு மணி அளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் எதிரில் சந்திக்க வேண்டும் ரயில் பயணத்தின் போது உணவு அவரவர்களே கொண்டு வர வேண்டும்)
ரயில் பயணம் ரயில் பயணத்தின் போது தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகாலை ஆக்ரா ரயில் நிலையம் சென்றடைதல் காலை உணவுக்கு பின்னர் கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா சென்று தரிசனம் செய்தல். பின்னர் கோகுலம் சென்று தரிசனம் செய்தல் மதிய உணவுக்குப் பின்னர் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் கண்டு ரசித்தல் பின்னர் பேருந்து மூலமாக நைமிசாரண்யம் புறப்படுதல். இரவு தங்குதல்.
அதிகாலை நைமிசாரண்யம் மிகவும் புனிதம் நிறைந்த கோமதி நதி மற்றும் சக்கர தீர்த்தத்தில் நீராடி 108 திவ்ய தேசத்தில் ஒன்றான பெருமாள் திருக்கோவில் தரிசனம் செய்தல் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ லலிதாம்பிகை தரிசனம் செய்தல் பின்னர் அயோத்தி புறப்படுதல். அயோத்தியில் இரவு தங்குதல்.
அயோத்தி சரயு நதியில் புனித நீராடுதல் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமஜென்ம பூமி குழந்தை ராமர் தரிசனம் செய்தல், பின்னர் அயோத்தியில் உள்ள ஆஞ்சநேயர் மந்திர் தசரதர் அரண்மனை தரிசனம் செய்தல் மாலை கயா புறப்படுதல்.
காலை கயா சென்றடைதல் கயாவில் பல்குனி நதி கரையில் அமைந்துள்ள விஷ்ணு பாதம் திருக்கோயில் சென்று நமது ஏழு ஜென்மத்திற்கும் 27 வகையான தொடர்புடைய முன்னோர்களுக்கும் பிண்டம் கொடுத்து பூஜை செய்தல். மதிய உணவுக்கு பின்னர் புத்தகயா புறப்படுதல் மகா போதி புத்தர் கோயில் புத்தர் ஞானம் பெற்ற போதிமரம் மிக உயரமான புத்தர் சிலை ஆகியவற்றைக் கண்டு மகிழ்தல். இரவு காசி புறப்படுதல்.
அதிகாலை மிகவும் புனிதம் நிறைந்த கங்கை நதியில் நீராடுதல் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தல். மதிய உணவுக்குப் பிறகு கங்கை நதியில் படகுமூலம் பயணம் செய்து படித்துறைகளில் அமைந்துள்ள முக்கிய இடங்களை பார்த்தல் காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர், காசி அன்னபூரணி தரிசனம் செய்தல் கங்கை நதிக்கரையில் தினசரி நடைபெறும் உலகப் புகழ் பெற்ற கங்கா ஆரத்தி கண்டு களித்தல். இரவு காசியில் தங்குதல்,
அதிகாலை பேருந்து மூலமாக அலகாபாத் புறப்படுதல் அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கு கொண்டு கங்கா யமுனா சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுதல். இரவு காசியில் தங்குதல்
காலை உணவுக்குப் பின்னர் காசியில் உள்ள கால பைரவர், துர்கா மந்திர், மானசா மந்திர், பிர்லா மந்திர் உட்பட சில இடங்களை தரிசனம் செய்தல் கடைவீதி சுற்றிப் பார்த்தல். இரவு ரயில் மூலம் சென்னை புறப்படுதல்.
ரயில் பயணம்
அதிகாலை நலமுடன் சென்னை வந்தடைதல் இந்த யாத்திரையின் மூலமாக எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ ஈசன் திருவருள் கிட்டும் என்பது உறுதி.

Related Tours