கேதார்நாத் பத்ரிநாத் கங்கோத்ரி யமுனோத்ரி -சார் தாம் சிறப்பு யாத்திரை
From
₹34900.00
Duration
16 days
Tour Type
மேலோட்டம்
இந்த சுற்றுலா ஒரு ஆன்மிகத்துடன் கூடிய இயற்கை அனுபவம். இந்தியாவின் பிரபலமான மற்றும் புனிதமான சைவ மற்றும் வைணவ தலங்களை தரிசிக்க இந்த பயணம் அமைக்கப்பட்டுள்ளது. , ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி போன்ற இடங்களைச் சுற்றி, கங்கை மற்றும் யமுனை ஆற்றின் மடியில் உள்ள புனித தீர்த்த ஸ்தலங்களை கண்டுகளிக்க அனுபவசாலி வழிகாட்டிகளுடன் விரிவான பயண திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில், பனிமலையின் அழகு, ஆற்றங்கரையில் ஆரத்தி தரிசனம், தொன்மையான கோயில்கள் மற்றும் புனிதமான ஆசிரமங்களில் தியானம் செய்யும் வாய்ப்புகளையும் அனுபவிக்க முடியும். இது உங்கள் ஆன்மிகத் தேடலுக்கு ஒரு மனநிறைவு அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பயணத்தின் சிறப்பம்சங்கள்:
- பரமசிவனின் திருவடி கேதார்நாத் தரிசனம்.
- வைணவ பெருமாளின் திருக்கோயில் பத்ரிநாத் தரிசனம்.
- ஹரித்துவாரில் கங்கை ஆரத்தி அனுபவம்.
- ரிஷிகேஷ் ஆசிரமங்களில் ஆன்மிக தியானம்.
- பனிமலைகளின் காட்சியுடன் இயற்கையின் சுகதான அனுபவம்.
இந்த பயணம் உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.
பயண திட்டம்
எல்லாம் வல்ல அண்ணாமலையார் திருவருள் துணையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணி அளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சார் தாம் யாத்திரை புறப்படுதல். யாத்திரையில் கலந்து கொள்ளும் யாவரும் இரவு 8 மணிக்கு முன்னதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள அடையாறு ஆனந்த பவன் உணவகத்தின் எதிரில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து இருக்க வேண்டும். சென்னை யாத்ராவின் மேலாளர் மற்றும் பயண அமைப்பாளர்கள் அங்கு தங்களை சந்தித்து தங்களுக்கு தேவையான அடையாள அட்டை, ரயில் டிக்கெட். தட்டு, டம்ளர் ஆகியவற்றை வழங்குவார்கள் மற்றும் ரயிலில் ஏறி பயணம் செய்ய தகுந்த வழி காட்டுவார்கள்.
ரயில் பயணம் ரயில் பயணத்தின் போது தங்களுடைய உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் விலை உயர்ந்த தங்க நகைகளை அணிந்து வர வேண்டாம் ரயில் பயணத்தின் போது அவரவர்களே உணவு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஹரித்துவார் சென்று நமது சொந்த கிச்சனில் நாம் சமைக்க துவங்குவோம். அதிலிருந்து திரும்ப வரும் வரை அனைவருக்கும் தென்னிந்திய சைவ உணவு தேவைக்கேற்ப வழங்கப்படும். திரும்ப வரும் பொழுது மூன்று நேரத்திற்கு பார்சல் உணவு வழங்கப்படும். யாவரும் ரயில் பயணத்தின் போது சாப்பிடுவதற்கு பிரட் ஜாம் பழ வகைகள் முந்திரி திராட்சை உலர்ந்த பழ வகைகள் பிஸ்கட் நொறுக்குத் தீனிகள் தேவைக்கேற்ப கொண்டு வர வேண்டும். யாவரும் தினசரி பயன்படுத்தக்கூடிய மருந்து மாத்திரைகள் மாத்திரை சீட்டு செல்போன் சார்ஜர் பூட்டு சாவி குளிர்காலத்திற்கு தேவையான உடைகள் ஆகியவற்றை மறவாமல் கொண்டு வர வேண்டும்.
காலை சுமார் எட்டு மணி அளவில் புதுடில்லி ரயில் நிலையம் சென்றடைதல் அவரவர்கள் ரயிலிலேயே தூய்மை செய்து கொள்ள வேண்டும் ஹரித்துவார் சென்று தான் நாம் குளிப்பதற்கு வசதி கிடைக்கும். மதிய உணவுக்குப் பிறகு ஹரித்துவாரில் அமைந்துள்ள கங்கை நதியில் புனித நீராடுதல் மலை மீது அமைந்துள்ள மானசாதேவி, சண்டிதேவி திருக்கோயில் சென்று வழிபாடு செய்தல் இரவு நடைபெறும் கங்கா ஆரத்தி பூஜையை கண் குளிர கண்டு மனம் நிறைய பிரார்த்தித்தல். இரவு தங்குதல்.
காலை உணவுக்குப் பிறகு கேதார்நாத் நோக்கி நமது பயணம் துவங்கும் பேருந்தில் தங்களுக்கான இருக்கை ஒதுக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் பேருந்தில் பெரிய அளவிலான ட்ராலி பேக் வைக்க இடம் இருக்காது அப்படி பெரிய அளவிலான ட்ராலி பேக் கொண்டு வந்தால் தாங்களே பேருந்து மீது வைத்துக் கட்டிக் கொண்டு வர வேண்டி இருக்கும் எனவே சின்ன சின்ன பேக்காக ரெண்டு கொண்டு வரவும் பேருந்தில் வயது வித்தியாசம் என்று கிடையாது ஒரு நாள் முன்னிருக்கையில் அமர்பவர்கள் அடுத்த நாள் பின்னாடி இருக்கையில் அமர வேண்டும் மலை மீது பயணம் செய்வதால் பேருந்து மெதுவாக தான் செல்லும்.
கேதார்நாத் போகும் வழியில் தேவ பிரயாகை என்கிற இடத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பெருமாளை தரிசனம் செய்தல் இரவு சீதாப்பூர் என்கிற இடத்தில் தங்குதல்
இன்று மிக மிக முக்கியமான நாளாகும் சுமார் 20000 அடி உயரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நமது முழு முதல் கடவுளான எம்பெருமான் சிவபெருமானை தரிசனம் செய்ய புறப்பட வேண்டும். அதிகாலை எழுந்து குளிர்கால உடைகள் மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிறிய வேன் மூலமாக (வேன் செலவு மற்றும் குதிரை செலவு தனி) கௌரி குண்ட் செல்ல வேண்டும். அங்கே அமைந்துள்ள குதிரை ஸ்டாண்டில் சென்று பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குதிரை மீது ஏறி கேதார்நாத் யாத்திரை மேற்கொள்ள வேண்டும். குதிரையில் செல்லும் பொழுது இயற்கை காட்சிகள் அருவிகள் ஆகியவற்றை கண்டு ரசித்துக்கொண்டே செல்லலாம் குதிரைப் பயணம் பாதுகாப்பாக இருக்கும் பயப்படத் தேவையில்லை. கேதார்நாத் மலை மீது சென்றவுடன் இ-பாஸ் கவுண்டரில் பதிவு செய்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். நாம் குழுவாக சென்றால் அங்கே இருக்கக்கூடிய பூஜை செய்யக்கூடிய பண்டிட் அவர்களை அணுகினால் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வார்கள். சாமி தரிசனம் முடிந்தவுடன் விருப்பப்படுபவர்கள் தங்களது சொந்த செலவில் அங்கே தங்கி இருந்து விட்டு அடுத்த நாள் காலை புறப்பட்டு வரலாம் அல்லது உடனே புறப்பட்டு வருபவர்கள் மீண்டும் குதிரை மூலமாக கீழே இறங்கி நாம் தங்குமிடத்திற்கு வந்து ஓய்வு எடுக்கலாம் இரவு தங்குதல் குழுவாக செல்வதால் நமக்கு வாகனங்கள் எளிமையாக கிடைக்கும் கட்டணமும் குறைவாக இருக்கும் எனவே குழுவாக இணைந்து செல்ல முயற்சிக்க வேண்டும்.
காலை உணவுக்குப் பின்னர் சிவன் பார்வதி திருமணம் நடைபெற்ற திரியுகி என்கிற இடத்திற்கு சென்று அங்கே திருமண கோலத்தில் காட்சி தரும் எம்பெருமான் சிவபெருமானை வணங்க வேண்டும். இங்கே இடைவிடாமல் தொடர்ந்து எரிந்து வருகின்ற யாக குண்டத்தில் மூலிகை பொருட்களை போட்டு அக்னி பகவானை வணங்க வேண்டும். கோயிலை சுற்றி உள்ள புனித தீர்த்தங்களில் நீர் தெளித்துக் கொள்ள வேண்டும். நமது குடும்பம் நமது நண்பர்கள் உறவினர்கள் குடும்பம் ஆகியவற்றில் யாருக்கேனும் திருமணம் நடைபெறாமல் தடையாக இருந்தால் இங்கே வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். இரவு தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் நமது பேருந்து மூலமாக 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் நோக்கி நமது பயணம் துவங்கும். போகும் வழியில் ருத்ர பிரயாகை மற்றும் குப்த காசி ஆகிய இடங்களை தரிசனம் செய்தல். இரவு பிபில் கோட் என்கிற இடத்தில் தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் 108 திவ்ய தேசங்களில் 106வது திவ்ய தேசமான விஷால் பத்ரி என்று அழைக்கக்கூடிய பத்ரிநாத் பெருமாளை தரிசனம் செய்ய புறப்படுதல். வழியில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றான ஜோஷி மட் நரசிங்க பெருமாளை தரிசனம் செய்தல், பத்ரிநாத் சென்றவுடன் அங்கே இயற்கையாக அமைந்துள்ள தப்த குண்டம் என்கிற வெந்நீர் குளத்தில் புனித நீராடுதல், பின்னர் பத்ரிநாத பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதல். மீண்டும் தங்குமிடம் வந்து இரவு தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் கங்கை நதி புறப்படும் இடமான கங்கோத்ரி நோக்கி புறப்படுதல் போகும் வழியில் உத்தரகாசி நகரில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் பெருமாளை தரிசித்தல். இரவு தங்குதல்.
காலை உணவுக்கு பின்னர் பேருந்து மூலமாக கங்கை நதி புறப்படும் இடமான கங்கோத்ரி புறப்படுதல் பின்னர் ஆர்ப்பரித்து அழகாக தரையைத் தொடும் கங்கை நதியில் புனித நீராடுதல் கங்கா மாதாவை கண் குளிர கண்டு தரிசித்தல் பின்னர் இருப்பிடம் திரும்பி இரவு தங்குதல்.
காலை உணவு பின்னர் பார்கோட் நகரம் வழியாக யமுனா நதி புறப்படும் இடமான யமுனோதிரி தரிசனம் செய்ய புறப்படுதல் போகும் வழியில் சயனா சட்டி என்கிற இடத்தில் தங்குதல்.
காலை உணவுக்குப் பிறகு பேருந்து மூலம் புறப்பட்டு யமுனோத்ரி அடிவாரத்தில் சென்று அங்கிருந்து குதிரை அல்லது Doli மூலமாக சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அங்கு இயற்கையாகவே அமைந்துள்ள வெந்நீர் குளத்தில் புனித நீராடுதல் திருக்கோயில் சென்றடைந்து தரிசனம் செய்தல் பின்னர் இருப்பிடம் திரும்பி இரவு தங்குதல்.
பேருந்து மூலமாக கங்கை நதி தரையில் வந்து சேரும் இடமான ரிஷிகேஷ் நோக்கி புறப்படுதல் மதிய உணவுக்குப் பிறகு ரிஷிகேஷ் இல் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தொங்கு பாலங்களான லஷ்மன் ஜூலா அனுமன் ஜூலா ஆகிய தொங்கு பாலங்களை பார்த்தல். கங்கை நதியில் புனித நீராடுதல் கங்கை நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கீதா ஆசிரமம் பரமார்த்த நிகேதன் ஆசிரமம் மற்றும் சில இடங்களை பார்த்தல்.
அங்கே அமைந்துள்ள தசாவதாரம் திருக்கோயில் ஹனுமான் மந்திர் ஆகியவற்றை தரிசனம் செய்தல் இரவு நடைபெறும் கங்கா ஆரத்தி பூஜை கண்டு ரசித்தல் இரவு ஹரித்வார் தங்குதல்,
காலை உணவுக்குப் பின்னர் புதுடில்லி புறப்படுதல் மதிய உணவுக்கு பின்னர் புது தில்லியில் அமைந்துள்ள அக்ஷர்தாம் பாராளுமன்றம் இந்தியா கேட் உட்பட சில இடங்களை பார்த்தல். பின்னர் புதுடில்லி ரயில் நிலையம் சென்று இரவு 8 மணி அளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை புறப்படுதல்.
முழுவதும் ரயில் பயணம்.
காலை நலமுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைதல்.