நவ ஜோதிர் லிங்க தல யாத்திரை
From
₹33900.00
Duration
15 days
Tour Type
மேலோட்டம்
நவ ஜோதிர்லிங்க தல யாத்திரை
சென்னை யாத்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் – சிறப்பு யாத்திரை
இந்த ஆன்மிக யாத்திரை நவ ஜோதிர்லிங்க தலங்களை சுற்றி, பக்தர்களுக்கு சிவனின் அருள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பான அனுபவமாக அமையும். இந்த 9 புனித தலங்கள் இந்தியாவின் முக்கிய ஜோதிர்லிங்க தலங்களாகவும், சிவனின் பூரண உருவமாகவும் போற்றப்படுகின்றன.
3Ac ரயில் Ac பேருந்து சுத்தமான ரூம் வசதி தென்னிந்திய சைவ உணவு மினரல் வாட்டர் தமிழ் கைடு வசதி போட் மற்றும் உள்ளூர் சுற்றிப் பார்க்கும் வாகன வசதி ஆகியவை இக்கட்டணத்தில் அடங்கும்
பயணக் கட்டணத்தில் உள்ளவை:
- தனியார் டிராவல் பேருந்து மற்றும் ரயில் பயண வசதி.
- ஒவ்வொரு இடத்திலும் வசதியான தங்குமிடங்கள்.
- குருவின் வழிகாட்டுதல் மற்றும் ஆன்மிக விளக்கம்.
- பயணத்தில் உள்துறை ஏற்பாடுகள்.
பயண திட்டம்
மதியம் 3 மணியளவில் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் வந்தடைதல். பின்னர் மாலை 5.00 மணியளவில் எல்லாம் வல்ல அண்ணாமலையார் திருவருள் துணையுடன் ஒன்பது ஜோதிர்லிங்க யாத்திரை சென்னையிலிருந்து புறப்படுதல்.
செவ்வாய்க்கிழமை காலை ஹைதராபாத் இரயில் நிலையம் சென்றடைதல். இரயில் நிலையத்தில் சற்று ஓய்வுக்குப்பின்னர் ஸ்ரீசைலம் புறப்படுதல் (ஜோதிர்லிங்கம்) போகும் வழியில் பாதாள கங்கையில் புனித நீராடுதல், ஸ்ரீ சைலம் சென்றடைதல். இரவு மல்லிகார்ஜினர் தரிசனம் செய்தல். இரவு தங்குதல்.
காலை உணவுக்குப்பின்னர் ஸ்ரீ சைலத்திலிருந்து ஹைதராபாத் புறப்படுதல். ஹைதராபாத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ இராமானுஜர் திருவுருவச் சிலை தரிசனம் செய்தல். அங்கு அமைந்துள்ள 108 திவ்ய தேச பெருமாள் திருக்கோயில் தரிசனம் செய்தல். இரவு இரயில் மூலம் பூனே புறப்படுதல்.
காலை ஹைதராபாத் இரயில் நிலையம் சென்றடைதல். இரயில் நிலையத்தில் சற்று ஓய்வுக்குப்பின்னர் ஸ்ரீசைலம் புறப்படுதல் (ஜோதிர்லிங்கம்) போகும் வழியில் பாதாள கங்கையில் புனித நீராடுதல், ஸ்ரீ சைலம் சென்றடைதல். இரவு மல்லிகார்ஜினர் தரிசனம் செய்தல். இரவு தங்குதல்.
காலை உணவுக்குப்பின்னர் ஸ்ரீ சைலத்திலிருந்து ஹைதராபாத் புறப்படுதல். ஹைதராபாத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற ஸ்ரீ இராமானுஜர் திருவுருவச் சிலை தரிசனம் செய்தல். அங்கு அமைந்துள்ள 108 திவ்ய தேச பெருமாள் திருக்கோயில் தரிசனம் செய்தல். இரவு இரயில் மூலம் பூனே புறப்படுதல்.
காலை உணவுக்குப்பிறகு பீமா சங்கர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்யப் புறப்படுதல், இரவு தங்குதல்.
காலை உணவுக்குப்பிறகு நாசிக் அருகில் அமைந்துள்ள திரியம்பகேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்யப் புறப்படுதல், தரிசனம் நிறைவு செய்து இரவு சீரடி புறப்படுதல், சீரடியில் இரவு தங்குதல்,
காலை உணவுக்குப்பிறகு கிருஷ்ணேஸ்வர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்யப் புறப்படுதல். தரிசனம் நிறைவடைந்தவுடன் பரலி வைத்யநாத் தரிசனம் செய்யப் புறப்படுதல், இரவு பரலியில் தங்குதல்
காலை பரலி வைத்யநாத் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்தல். தரிசனம் நிறைவடைந்தவுடன் அவுண்டா நாகநாத் புறப்படுதல். அவுண்டா நாகநாத் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்தல். இரவு பேருந்து மூலம் ஓம்காரேஸ்வரர் தரிசனம் செய்யப் புறப்படுதல்.
காலை நர்மதா நதியில் படகு மூலமாக சென்று ஓம்காரேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்தல்.(படகு செலவு தனி) பின்னர் பேருந்து மூலமாக உஜ்ஜயினி சென்றடைதல், இரவு தங்குதல்
காலை உஜ்ஜயினில் உள்ள காலபைரவர், காளிக் கோயில் உட்பட சில இடங்களை வாகனம் மூலம் சென்று தரிசித்தல் (ஆட்டோ செலவு தனி). உஜ்ஜயினில் அமைந்துள்ள மகா காளேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்தல். இரவு இரயில் மூலம் அகமதாபாத் புறப்படுதல்.
காரலை அகமதாபாத் சென்றடைதல், பேருந்து மூலமாக சோம்நாத் புறப்படுதல். இரவு தங்குதல்
காலை உணவுக்குப்பின்னர் சோம்நாத் - சோமநாதீஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்தல். (ஆட்டோ செலவு தனி) மதிய உணவுக்குப்பின்னர் கோலியாக் கடல்கோயில் தரிசனம் செய்யப் புறப்படுதல். போகும் வழியில் கொடியாரம்மன் (சக்தி பீடம்) தரிசனம் செய்தல். இரவு ஓய்வெடுத்தல்.
காலை கோலியாக் அருகில் உள்ள நிஷ்கலங் மகாதேவ் அதாவது பஞ்ச பாண்டவர்கள் போரில் ஏற்பட்ட சாபத்தை போக்குவதற்காக ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இந்தக் கோயில் ஒரு கிலோ மீட்டர் கடலுக்கு நடுவில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடல் விலகி அந்த சுவாமியை தரிசனம் செய்ய முடியும். தரிசனம் நிறைவடைந்ததும் அகமதாபாத் புறப்படுதல், இரவு தங்குதல்.
அகமதாபாத்தில் ஓய்வெடுத்தல், அக்ஷர்தாம் சென்று வருதல், இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல்.
இரயில் பயணம்
அதிகாலை சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் நலமுடன் வந்தடைதல்.