குஜராத்,அகமதாபாத், துவாரகா, நாகேஸ்வர், சோம்நாத், நிஷ்கலங் மகாதேவ் கடற்கோயில் புனித யாத்திரை

From

16900.00

Duration

10 days

Tour Type

மேலோட்டம்

சோம்நாத் அகமதாபாத் நிஷ்கலங் மகாதேவ் கடல் கோயில் மற்றும் கொடியார் அம்மன் சக்தி பீடம் – பன்னிரு திரு முறை சிறப்பு யாத்திரை

சென்னை யாத்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் – காசி மற்றும் மற்ற புனித தல யாத்திரை

இந்த சிறப்பு யாத்திரை, புனித தலங்களை தரிசித்து ஆன்மிக திருப்தியைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு அம்சங்களில் காசி விஸ்வநாதர் கோவில், மகா கும்பமேளா, கயா பிண்டதானம் மற்றும் பல முக்கிய இடங்கள் அடங்கும்.

பயணத்தில் பின்வரும் வசதிகள் வழங்கப்படும்:

  • 3rd AC ரயில் டிக்கெட்
  • 2×2 புஷ்பேக் பேருந்து
  • சுத்தமான தங்குமிடங்கள்
  • தென்னிந்திய சைவ உணவு
  • மினரல் வாட்டர்
  • தமிழ் வழிகாட்டி

பயண திட்டம்

காலை 9.00 மணியளவில் எல்லாம் வல்ல அண்ணாமலையார் திருவருள் துணையுடன் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் புறப்படுதல்.
இரயில் பயணம், பயணிகள் தங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை 6.00 மணியளவில் அகமதாபாத் இரயில்நிலையம் சென்றடைதல், பின்னர் பேருந்து மூலமாக துவாரகா கிருஷ்ணர் வளர்ந்த இடம் தரிசனம் செய்தல்.
காலை உணவுக்குப்பின்னர் திரிவேணி சங்கமம் சென்று நீராடுதல், கிருஷ்ணர் பிறந்த இடமான துவாரகா திருக்கோயில் திவ்ய தரிசனம் செய்தல். மதிய உணவுக்குப்பின் பேருந்து மூலமாக கண்ணன் வளர்ந்த இடமான பெட்துவாரகா புறப்படுதல். கடலுக்கு நடுவில் அமைந்துள்ள பெட்துவாரகாவிற்கு கப்பல் மூலமாக சென்று தரிசனம் செய்து வருதல். வரும் வழியில் நாகேஸ்வர் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று தரிசனம் செய்தல். இரவு துவாராகவில் தங்குதல்.
காலை உணவுக்குப்பின்னர் சோம்நாத் புறப்படுதல். வழியில் கிருஷ்ணர் வளர்ந்த இடமான மூல் துவாரகா சென்று தரிசனம் செய்தல், பின்னர் மகாத்மா காந்தி மகான் பிறந்த இடமான போர்பந்தர் சென்று அவரது இல்லத்தை சுற்றிப்பார்த்தல். கிருஷ்ணரின் அருமை நண்பரான குசேலர் திருக்கோயில் தரிசனம் செய்தல். (போர்பந்தர் உள்ளூர் சுற்றிப்பார்க்கும் ஆட்டோ செலவு தனி. இரவு சோம்நாத்தில் தங்குதல்.
காலை உணவுக்குப்பின்னர் சோம்நாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுதல். முன்னோர்களுக்கு திதி கொடுத்தல். பின்னர் ஆட்டோ மூலமாக பழைய சோம்நாத், சூரியன் கோயில், கிருஷ்ணன் பாதுகை உள்ள இடம், சோம்நாத் ஈஸ்வரர் உட்பட சில இடங்களை தரிசனம் செய்தல். இரவு பேருந்து மூலமாக நிஷ்கலங் மகாதேவ் பறப்படுதல்.
காலை பஞ்ச பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்த கடலுக்கு நடுவில் அமைந்துள்ள ஐந்து சிவலிங்கங்களை தரிசித்தல். அங்கு கடல் ஒரு குறிப்பிட்ட நேரம் விலகி நமக்கு வழி கிடைக்கும் அப்போதுதான் நாம் சென்று தரிசிக்க முடியும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கொடியார் மாதா 51 சக்தி பீடங்களில் ஒன்று தரிசனம் செய்தல். இரவு அகமதாபாத்தில் தங்குதல்.
காலை உணவுக்குப்பின்னர், அகமதாபாத்தில் உள்ளூர் சுற்றிப்பார்க்க புறப்படுதல். காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமம் சென்று அங்குள்ள கண்காட்சியை சுற்றிப்பார்த்தல். அக்ஷர்தாம் சென்று திருக்கோயில் தரிசனம் மற்றும் மாலை நடைபெறும் ஒலி ஒளிக்காட்சியை கண்டு ரசித்தல், இரவு தங்குதல்,
காலை உணவுக்குப்பின்னர் அகமதாபாத்தில் உள்ள பிற இடங்களை பார்க்கப் புறப்படுதல். படா மார்க்கெட் சோட்டா மார்க்கெட் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குதல். இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல்.
இரயில் பயணம்.
காலை நலமுடன் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்தடைதல்.

Related Tours