அமர்நாத் சிறப்பு யாத்திரை
From
₹39900.00
Duration
8 days
Tour Type
மேலோட்டம்
பயண சிறப்பம்சங்கள்:
- சிவ சிந்தனை சிவ பக்தி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- மூன்றாம் வகுப்பு ஏசி ரயில் கட்டணம், 2*2 Seat புஷ்பேக் a/c பேருந்து வசதி, தங்குவதற்கு ரூம் வசதி, தங்கும் இடங்களில் தென்னிந்திய சைவ உணவு உட்பட பயண கட்டணம் ரூபாய் 37,900/- மட்டும்
- ரயில் பயணத்தின் போது அவரவர்களே உணவு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
- பாதுகாப்பு கருதி சில இடங்களில்நாம் கேஸ் சிலிண்டர் கொண்டு செல்ல முடியாது அந்த சூழ்நிலையில் அமர்நாத் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள லங்கர்களில் தான் நாம் உணவு உட்கொள்ள வேண்டி இருக்கும். வாய்ப்பு உள்ள இடங்களில் நமது சொந்த கிச்சனில் தென்னிந்திய சைவ உணவு சுடச்சுட தயார் செய்து கொடுக்கப்படும்.
- பேருந்து செல்ல முடியாத இடங்களுக்கு சென்றுவர ஆட்டோ செலவு புதுடெல்லி சுற்றி பார்க்கும் செலவு அமர்நாத் சென்றுவர குதிரை செலவு வைஷ்ணவி தேவி மலை மீது சென்று வர ஆகும் செலவு ஆகியவை பயணிகளை சாரும்.
- புது டெல்லியில் இருந்து வரும் பொழுது மூன்று நேரத்திற்கு உணவு பேக் செய்து தரப்படும்.
- காலச் சூழ்நிலைக்கு ஏற்றார் போல பயண திட்டங்களை மாற்றவும் சேர்க்கவும் பயணத்தை ரத்து செய்யவும் சென்னை யாத்ரா நிறுவனத்திற்கு முழு உரிமை உண்டு.
பயண திட்டம்
எல்லாம் வல்ல அண்ணாமலையார் திருவருள் துணையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணி அளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக புதுடில்லி புறப்படுதல்.
ரயில் பயணத்தின் போது தங்களுடைய உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ரயில் பயணத்தின் போது உணவு அவர் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
ரயில் பயணம்.
காலை புதுடில்லி ரயில் நிலையம் சென்றடைதல். அங்கு சற்று நேரம் ஓய்வெடுத்தல் பின்னர் அமிர்தசரஸ் பொற்கோயில் நோக்கி ரயில் மூலம் புறப்படுதல். இரவு தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் ஆட்டோ மூலமாக சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் சென்று தரிசனம் செய்தல். அதற்கு அருகில் அமைந்துள்ள ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னத்தை பார்த்தல்
மதிய உணவுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகா பார்டர் சென்று அங்கு தினசரி நடைபெறும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வை கண்டு ரசித்தல்.
காலை உணவுக்குப் பிறகு அமர்நாத் புனித பயணத்தின் முதல் நாள் நிகழ்வை துவங்குதல். காலை 7 மணி அளவில் ரயில் மூலம் புறப்பட்டு ஜம்மு நகர் நோக்கி புறப்படுதல் வாய்ப்பு இருந்தால் ஜம்முவில் சில இடங்களை தரிசனம் செய்தல் பின்னர் அங்கிருந்து Katra புறப்பட்டு இரவு தங்குதல்.
காலை உணவுக்கு பின்னர் மலை மீது 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான வைஷ்ணவி தேவி மாதாவை குதிரை மூலம் சென்று தரிசனம் செய்து வருதல். நல்ல திடமாகவும் உடல் நலமாகவும் இருப்பவர்கள் நடந்து சென்று வரலாம் வைஷ்ணவி தேவி அம்பிகையின் திவ்ய தரிசனம் நிறைவு செய்து மீண்டும் குதிரை மூலமாக கீழே இறங்கி நாம் தங்கும் இடத்தில் இரவு தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரமான ஸ்ரீநகர் நோக்கி பேருந்து மூலம் புறப்படுதல் போகும் வழி எங்கும் இயற்கை காட்சிகளை ரசித்தல் இரவு தங்குதல்.
காலை உணவுக்குப் பின்னர் சிறிய வாகனம் மூலமாக ஸ்ரீ நகரில் அமைந்துள்ள முகல் கார்டன், பொட்டானிக்கல் கார்டன், டால் ஏரி (டால் ஏரியில் சென்று வரக்கூடிய படகு கட்டணம் தனி) மற்றுமுள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தல் (சிறிய வாகன கட்டணம் அவரவர்களுடையது) இரவு தங்குதல்.
காஷ்மீரில் அமைந்துள்ள சங்கர மடம் சென்று தரிசித்து வருதல் விருப்பப்படுபவர்கள் அருகில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வரலாம் (வாகன கட்டணம் மற்றும் நுழைவு கட்டணம் அவரவர்களுடையது ) இரவு தங்குதல்.
: காலை உணவுக்கு பின்னர் வாகனம் மூலப் புறப்பட்டு காஷ்மீர் அரசின் சட்ட திட்டங்கள் உட்பட்டு அமர்நாத் பனி லிங்கம் இருக்கக்கூடிய மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராணுவ கேம்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்குதல். குளிர் சற்று அதிகமாக இருக்கும் எனவே அதற்கு தேவையான ஜெர்கின் கை கிளவுஸ் கால் சாக்ஸ் தலை குல்லா ஆகியவற்றை அணிந்து மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கு எரிவாயு சிலிண்டர் கொண்டு செல்ல முடியாது எனவே உணவு சமைப்பதற்கு வாய்ப்பு இல்லை அங்கே அமைந்துள்ள லங்கர் என்று சொல்லக்கூடிய அன்னதான கூடங்களில் வழங்கப்படும் உணவை தான் சாப்பிட வேண்டும். திரும்ப Katra நகர் வந்த பிறகு தான் நாம் சமையல் செய்து சாப்பிட முடியும் எனவே அவசரத்திற்கு தேவையான பிஸ்கட் ரொட்டி ஜாம் உலர்ந்த பழ வகைகள் முந்திரி திராட்சை பாதாம் பிஸ்தா ஆகியவற்றை தேவைக்கு கொண்டு வர வேண்டும். அங்கு நாங்கள் சுகர் பேசன்ட் நேரத்திற்கு உணவு வேண்டும் என்று கேட்கக் கூடாது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிகாலை புறப்பட்டு அமர்நாத் யாத்திரை துவங்கும் நுழைவாயிலுக்கு சென்று ராணுவ பரிசோதனைகள் முடித்துவிட்டு குதிரை அல்லது Dolly மூலமாக அமர்நாத் பனி லிங்க ஈஸ்வரரை தரிசனம் செய்ய புறப்படுதல். பெரும்பாலும் நாம் பனிக்கட்டிகள் பணி ஆறுகள் மீது பயணம் செய்ய வேண்டி இருக்கும் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் சொட்டர் ஜெர்கின் தலைகுல்லா கை கிளவுஸ் காலில் அணிய சாக்ஸ் ஆகியவற்றை மறக்காமல் கொண்டு வர வேண்டும். சாக்ஸ் மட்டும் ஒரு ஐந்து செட் வாங்கி வர வேண்டும் நல்ல தரமான தண்ணீர் நனையாத ஒரு ஷூ போட்டு வர வேண்டும். ஏனெனில் குறைந்தது ஒரு கிலோமீட்டர் பனிக்கட்டியில் தான் நாம் நடந்து செல்ல வேண்டி இருக்கும் தேவைப்படுபவர்களுக்கு குதிரை ஸ்டான்டில் இருந்து
Dolly ஏற்பாடு செய்து தரப்படும். மிகவும் சிரமமான பகுதி என்பதால் நடக்கும்பொழுது மிகவும் பாதுகாப்புடன் நடக்க வேண்டும். நாம் இந்திய அரசின் ராணுவ கட்டுப்பாட்டில் தான் இந்தப் பயணம் நடைபெறும் நாம் தன்னிச்சையாக ஏதும் செய்ய இயலாது. கால சூழ்நிலைகள் கடுமையான மழை நிலச்சரிவு பயங்கரவாத தாக்குதல் போன்ற காரணங்களினால் பயணம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை என்றால் நாம் திரும்பவும் புதுடில்லி நோக்கி புறப்பட வேண்டி இருக்கும்.
இயற்கையாகவே அமைந்துள்ள பனி லிங்க வடிவிலான அமர்நாத் சிவனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும் ஏழு பிறவியில் நாம் பெற்ற புண்ணியத்தின் பயனாகவே இந்த தரிசனம் நமக்கு கிடைக்கும் என்பது உறுதி
அமர்நாத் பனி லிங்கத்தின் மேற்பகுதியில் இரண்டு சித்தர்கள் பறவை வடிவில் வசித்து வருவதை நாம் இப்போதும் காணலாம். தரிசனம் நிறைவடைந்த உடன் மீண்டும் குதிரை மூலமாக நாம் தங்கி உள்ள பால் டால் காம்பில் கூடாரத்தில் இரவு தங்குதல்.
காலை பால் டால் கேம்பில் இருந்து வைஷ்ணவி தேவி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ள Katra நகரம் சென்று இரவு தங்குதல்.
மாலை ரயில் மூலம் புதுடெல்லி புறப்படுதல்.
இரவு ரயில் பயணம்.
காலை புதுடில்லி சென்றடைதல். புதுடெல்லியில் உள்ள சனாதன் மந்திர் தர்மசாலாவில் அமைந்துள்ள ஹாலில் குளித்துவிட்டு. காலை உணவுக்கு பின்னர் புதுடில்லியில் அமைந்துள்ள செங்கோட்டை, இந்தியா கேட், பிர்லா மந்திர், ராஜ் காட், தாமரைக் கோயில், குதுப்பினார், இந்திரா காந்தி மெமோரியல், பாராளுமன்றம் உட்பட சில இடங்களை சுற்றிப் பார்த்தல். (உள்ளூர் சுற்றிப் பார்க்கும் செலவு தனி) இரவு ரயில் மூலம் சென்னை புறப்படுதல்.
ரயில் பயணம் ரயில் பயணத்தின் போது தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நலமுடன் வந்தடைதல் பின்னர் அமர்நாத் பயண நினைவுகளுடன் அவரவர்கள் இல்லம் திரும்புதல்.