கைலாஷ் மானசரோவர் சிறப்பு யாத்திரை

From

214000.00

Duration

15 days

Tour Type

மேலோட்டம்

கைலாஷ் மானசரோவர் சிறப்பு யாத்திரை

சென்னை யாத்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் வழங்கும் இந்த யாத்திரை, ஆன்மிக அனுபவங்கள் மற்றும் நதிகளின் தாயகமான மானசரோவரில் நீராடும் அரிய வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. பரமசிவனின் வாசஸ்தலமான புனித கைலாஷ் பர்வதத்தின் தரிசனம் உங்கள் ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பாக அமையும்.

பயண அம்சங்கள்:

  • காத்மாண்டு நகரில் இருந்து சாலை வழி சென்று வர 14 நாட்கள் ஆகும் சென்னையிலிருந்து சென்று வர (விமானம்) 16 நாட்கள் ஆகும்
  •  தினசரி மூன்று நேரமும் மிகவும் சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படும் தென்னிந்திய சைவ உணவு உடன் ஒரு லிட்டர் மினரல் வாட்டர்
  • பாதுகாப்பான சுத்தமான தங்குமிடங்கள்
  • பயணம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசக்கூடிய கைடு வசதி
  • பிரத்தியேகமான முதல் உதவி வசதி ஆக்சிஜன் சிலிண்டர் வசதி எமர்ஜென்சி மருத்துவ வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

பயண திட்டம்

எல்லாம் வல்ல அண்ணாமலையார் திருவருள் துணையுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்துபுறப்பட்டு நேபாள் நாட்டில் அமைந்துள்ள காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திற்கு நலமுடன் சென்றடைதல் (விமான டிக்கெட் புக்கிங் செய்வதைப் பொறுத்து புறப்படும் மற்றும் சென்று சேரும் நேரம் அறிவிக்கப்படும்) அங்கு எமது பிரதிநிதிகள் வரவேற்று தங்கும் இடத்திற்கு அழைத்து செல்வார்கள் மூன்று நட்சத்திர வசதிகள் கொண்ட மிகவும் பாதுகாப்பான விடுதியில் இரவு தங்குதல்
காலை உணவுக்குப் பின்னர் காத்மாண்டு நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் திருக்கோயில் சென்று எல்லாம் வல்ல இறைவனிடம் நமது யாத்திரை சிறப்புற நடைபெற வேண்டி விண்ணப்பம் செய்தல் பின்னர் 51 சக்தி பீடங்களில் ஒன்றான இருதய அம்மன் ஜல நாராயணன் திருக்கோயில் உட்பட சில திருக்கோயில்களை தரிசனம் செய்தல் சற்று ஓய்வுக்குப் பின் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு திட்டமிடுதல் இரவு தங்குதல்
அதிகாலை காலை உணவுக்குப் பின்னர் கைலாஷ் யாத்திரை புறப்படுதல் சுமார் 145 கிலோமீட்டர் பயணம் செய்து (1600மீட்டர் உயரம்) சியா ப்ருபேஸ் (Shyabrubeshi) நகரம் சென்றடைதல் போகும் வழியில் மதிய உணவு வழங்கப்படும் அங்கு இரவு தங்குதல் (சூழ்நிலைக்கு ஏற்றார் போல கட்டில் மெத்தை குளிர் தாங்கும் போர்வை சுடுநீர் வசதி) கொண்ட தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் யாத்திரை என்பதால் மலை மீது பயணம் செய்யும்போது இருவர் தங்கும் தனி அறைகள் கிடைப்பது கடினம்.
காலை உணவுக்குப் பின்னர் பயணத்தை தொடர்தல் (3960 மீட்டர் உயரம் 3 மணி நேர பயணம்) நேபாள் பார்டர் சென்றடைந்து அங்கு சீனா மற்றும் நேபாள் நாடுகளின் விசா மற்றும் இமிகிரேஷன் விஷயங்களை முடித்தல் பின்னர் அங்கே நமக்காக காத்திருக்கும் தீபெத் கைடு அவர்களை சந்தித்து பின்னர் பயணத்தை தொடர்தல் பின்னர் தீபெத் நாட்டிலுள்ள கியராங் (Kyirong) நகரில் உள்ள விடுதியில் இரவு தங்குதல்
கியராங் (Kyirong) நகரில் ஓய்வெடுத்தல் அருகில் உள்ள மார்க்கெட் மற்றும் அம்மன் கோயில் பார்வையிடுதல் இரவு நன்றாக ஓய்வெடுத்தல்
காலை உணவுக்கு பின்னர் பயணத்தை தொடர்தல் (4550 மீட்டர் உயரம் மற்றும் 350 கிலோமீட்டர் பயணம்) பல்வேறு கன வாய்களை கடந்து பிரம்மபுத்திரா நதியை கடந்து பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்தபடி சைனாவில் உள்ள சீனாவில் உள்ள சாகா நகரம் சென்றடைதல் பயண வழியில் உணவு வழங்கப்படும் இரவு சாகா நகரில் தங்குதல்
கைலாஷ் மானசரோவர் நோக்கி பயணத்தை தொடர்கள் இந்த நாள் மிக மிக முக்கியமான நாளாகும் (4550 மீட்டர் உயரம் -270 கிலோமீட்டர் பயணம்) இந்த நாளில் தான் தேவர்களும் ரிஷிகளும் புனித நீராடக்கூடிய மிக மிக புனிதம் வாய்ந்த மானசரோவர் ஏரியில் புனித நீராடுதல் மான சரோவர் ஏரியை சுற்றி வலம் வருதல் எம்பெருமான் சிவபெருமானின் கைலாஷ் முதல் தரிசனத்தை கண்டு மகிழ்தல் இரவு மானசரோவர் அருகில் அமைந்துள்ள சுகும்பா (Chu Gumpa) என்கிற இடத்தில் தங்குதல்
அதிகாலை உணவுக்கு பின்னர் கைலாஷ் பர்வதம் அடிவாரத்தில் அமைந்துள்ள தார் சன் (Darchen) மலை அடிவாரத்திற்கு புறப்படுதல் (4575 மீட்டர் உயரம் -40 கிலோமீட்டர் பயணம்) Darchen புறப்படுவதற்கு முன் காலையில் எழுந்து மான சரோவர் ஏரியில் ரிஷிகள் முனிவர்கள் நீராடுவதை வாய்ப்பு உள்ளவர்கள் காணலாம் அனைவருக்குமே அந்தப் பெரும் பாக்கியம் கிட்டாது காலை பூஜைகள் முடித்துக் கொண்டு காலை உணவு சாப்பிட்ட பின்னர் பயணம் புறப்படும் இரவு கேம்பில் தங்குதல்
இன்று மிக மிக முக்கியமான நாளாகும் கைலாய மலை கிரிவலம் துவங்கும் நாளாகும் முதலில் வாகனம் மூலமாக எமத்துவார் (8 கிலோமீட்டர்) சென்றடைதல் அங்கிருந்து கைலாய மலை செல்லும் கிரிவலம் துவங்கும் மூன்று நாட்கள் கொண்ட கிரிவலத்தில் சுமார் 42 கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டி இருக்கும் மிக உயரமான டோல்மா பாஸ் (Dolma pass 5600 M) மிகவும் திடகாத்திரமாக சுவாசம் சீராக இருப்பவர்கள் மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் அங்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே கிரிவலம் செய்ய அனுமதிக்கப்படும் கிரிவலம் செல்வதற்கு நடைபாதையாகவே செல்லலாம் இல்லையென்றால் குதிரை மீது பயணம் செல்லலாம் (குதிரை செலவு சுமார் 30000/-வரை ஆகலாம்) குதிரையில் செல்ல விரும்புவோர் முதலிலேயே பதிவு செய்தால்தான் கிடைக்கும் உடல் நலக்குறைவு காரணமாக கிரிவலம் செல்ல இயலாதவர்கள் அங்கிருந்து கைலாஷ் மலையின் வடக்கு முகம் வரை சென்று தரிசனம் நிறைவு செய்து மீண்டும் வாகனம் நிறுத்தும் இடம் வந்து அதில் பயணம் செய்து அனைவரும் கிரிவலம் நிறைவு செய்து வரும் வரை டார்ச்சன் கேம்பில் காத்திருக்க வேண்டும் உணவு ஏற்பாடு செய்து தரப்படும் கிரிவலம் சொல்பவர்கள் இரவு டிரா புக் (Dirapuk 4860 மீட்டர் உயரம் -13 கிலோமீட்டர் பயணம்) கேம்பில் தங்குதல்
அதிகாலை சுமார் (4760 மீட்டர் உயரம் -22 கிலோமீட்டர் பயணம்) பயணம் செய்து ZUTHULPUK கேம்ப் சென்றடைதல் யாத்திரிகர்களுக்கு தேநீர் காலை உணவு மதிய உணவு இரவு உணவு எல்லா நாட்களிலும் கண்டிப்பாக வழங்கப்படும் இன்றைய தினம் சூரிய உதயத்தில் சுந்தரரால் பாடல் பெற்ற பொன்னார் மேனியன் அதாவது தங்க நிறத்தில் கயிலை மலையானை தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிடைக்கும் போகும் வழியில் பார்வதி தேவியார் நீராடும் கௌரி குண்ட் புனித ஏரியை தரிசனம் செய்து தீர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும் கிரிவலம் போது மூச்சுத் திணறல் சுவாசம் செய்வதின் கடினம் மார்பகம் வலி எடுத்தல் சுவாச குழாயில் அடைப்பு மாதிரி தெரிதல் காய்ச்சல் எடுத்தல் அதிகப்படியான தும்மல் தலைவலி என சிறிய அளவில் ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் கூட உடன் வரும் பயண மேலாளர் அல்லது அருகில் உள்ள மருத்துவ கேம்பில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எந்த காரணம் கொண்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது.
அதிகாலை புறப்பட்டு டார்ச்சன் கேம்ப் (Darchen camp) சென்றடைந்து நமது கிரிவல பயணத்தை நிறைவு செய்வோம் பின்னர் நமது வாகனம் மூலமாக சாகா நகரம் நோக்கி பயணம் செய்வோம் இரவு சாகாவில் தங்குதல்
அதிகாலை சாகாவிலிருந்து புறப்பட்டு நேபாள எல்லை நோக்கி புறப்பட்டு சீனா எல்லை கடந்த பின் சிய்ரு பேசியில் (Chiya brubesi) இரவு தங்குதல்
காலை உணவுக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காத்மாண்டு நோக்கி பயணம் செய்வோம் இரவு காத்மாண்டு வந்தடைவோம் இரவு நட்சத்திர விடுதியில் தங்குதல்
யாத்திரை இனிதே நிறைவு செய்து காத்மாண்டு நகரில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுதல் இரவு சென்னை நலமுடன் வந்தடைதல்.

Related Tours

Translate To English